பத்மனாபபுரத்தில் இருந்து புறப்பட்டது நவராத்திரி பவனி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2021 12:10
நாகர்கோவில்-நவராத்திரி பூஜைக்காக கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரத்தில் இருந்து கல்விக்கரசி சரஸ்வதிதேவி இ முருகன்இ முன்னுதித்த நங்கை விக்ரக பவனி நேற்று காலை திருவனந்தபுரம் புறப்பட்டது.
திருவிதாங்கூரின் தலைநகராக விளங்கிய பத்மனாபபுரம் பின்னர் நிர்வாக வசதிக்காக திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. கம்பர் வழிபட்ட சரஸ்வதி தேவி கோயில் பத்மனாபபுரம் அரண்மனை வளாகத்தில் உள்ளது. இங்கு மன்னர்கள் நவராத்திரி விழாவை பெரும் விழாவாக கொண்டாடினர். திருவனந்தபுரத்துக்கு தலைநகர் மாற்றப்பட்ட பின்னர் ஆசாரங்கள் மாறாமல் சுவாமி விக்ரகங்கள் யானைஇ பல்லக்குஇ மேளதாளத்துடன் பவனியாக கொண்டு செல்லப்பட்டு நவராத்திரி பூஜை நடைபெற்றது.நுாற்றாண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய நிகழ்ச்சியில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.
யானைஇ பல்லக்குஇ அதிக மேளதாளங்கள் தவிர்க்கப்பட்டு நான்கு பேர் மட்டும் தட்டுவாகனத்தில் சுவாமியை சுமந்து செல்ல அனுமதிக்கப்பட்டது. இந்த ஆண்டும் அதே முறையில் பத்மனாபபுரத்தில் இருந்து நேற்று காலை 8:30 மணிக்கு சரஸ்வதிதேவிஇ முருகன்இ முன்னுதித்த நங்கை சுவாமி விக்ரகங்கள் பவனி புறப்பட்டது. பின்னர் அரண்மனை வளாகத்தில் இந்த பவனிக்கு முறைப்படி வரவேற்பு கொடுக்கப்பட்டது. முன்னதாக அரண்மனை உப்பிரிகை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மன்னரின் உடைவாளை கேரள தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன். கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி எடுத்து கொடுக்க அதை குமரி மாவட்ட தேவசம்போர்டு இணைஆணையர் ஞானசேகர் பெற்றுக்கொண்டார்.இதில் முன்னாள் மத்திய அமைச்சர் முரளிதரன்இ தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ்இ எஸ்.பி. பத்ரிநாராயணன்இ தேவசம்போர்டு தலைவர் சிவகுற்றாலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஊர்வலம் நேற்று மதியம் குழித்துறை வந்தடைந்தது. இன்று களியக்காவிளையில் கேரள அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்ட பின்னர் நெய்யாற்றின்கரை சென்று தங்கிஇ நாளை திருவனந்தபுரம் சென்றடையும். அக்.6ல் நவராத்திரி பூஜை தொடங்கும்.