மைசூரு : மைசூரில் தசரா திருவிழா கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. ஆறு மாதங்களுக்கு பின்இ மைசூருக்கு சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நகரம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.மைசூரு நகர்இ தசராவுக்கு தயாராகி வருகிறது. கொரோனா குறைந்துள்ளதால்இ விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதால்இ சுற்றுலா பயணியரால்இ மைசூரு நிரம்பி வழிகிறது. இவர்களை நம்பி வாழ்க்கை நடத்திய வியாபாரிகள்இ வர்த்தகர்கள்இ தொழிலாளர்களின் முகத்தில் மகிழ்ச்சி தென்படுகிறது.அரண்மனைஇ மிருகக்காட்சி சாலைஇ சாமுண்டி மலையில் சுற்றுலா வாசிகள் பெருமளவில் காணப்படுகின்றனர். ஓராண்டுக்கும் மேலாக காலியாக இருந்த மைசூரின் ஓட்டல்இ சொகுசு விடுதிகள்இ லாட்ஜ்களில் அறைகள்இ தற்போது நிரம்பியுள்ளன.மைசூருக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால்இ பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போலீசார் மப்டி எனப்படும் சீருடையில்லாமல் சாலைகளில் ரோந்து சுற்றிஇ மக்களை கண்காணிக்கின்றனர். சந்தேகத்திற்கிடமானவர்களை கண்டால்இ விசாரணை நடத்துகின்றனர்.மைசூரு மட்டுமின்றிஇ கர்நாடகாவின் பல மாவட்டங்களிலும் கூடஇ சுற்றுலா தலங்களில் மக்களின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழகம்இ ஆந்திராஇ கொரோனா அதிகமாக உள்ள கேரளாவிலிருந்துஇ பெருமளவில் வந்துள்ளனர். இவர்கள் சமூக விலகலை மறந்துஇ கூட்டம்இ கூட்டமாக நடமாடுகின்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.வேறு மாநிலங்களிலிருந்து வருவோர்இ பொறுப்புணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். கொரோனா விதிமுறைகளை பின்பற்றிஇ சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க வேண்டும் எனஇ அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள்இ கோரிக்கை விடுத்துள்ளன.