திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் உண்டியல் மூலம், 29 லட்சத்து 73 ஆயிரத்து 964 ரூபாய் கிடைத்தது. திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், துணை ஆணையர் வீரபத்திரன், உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி, செயல் அலுவலர் பாலகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலையில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டன. கோவில் பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் நூறு பேர், உண்டியல் பணத்தை எண்ணினர். உண்டியலில் 29 லட்சத்து ஆயிரத்து 964 ரூபாய், 165 கிராம் தங்கம், 3,100 கிராம் வெள்ளி இருந்தது.