சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு, நேற்று சிவகாமி அம்மனுக்கும், நடராஜ பெருமானுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. சேலம், செவ்வாய்ப்பேட்டை மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் கோவிலில் ஆனித் திருமஞ்சன உற்சவம் நடந்தது. தினந்தோறும் மூலவருக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. தினமும் மாலை 6 மணிக்கு, சாயரட்சை பூஜையும், திருவீதி உலா புறப்பாடும் நடக்கிறது. நேற்று முன் தினம் ஆனி திருமஞ்சனம் விழாவை முன்னிட்டு, சிவகாமி அம்மன் உடனுறை ஆனந்த நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று காலை யாகசாலை பூஜையும், மூலவர் அபிஷேகம், தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. நேற்று பகல் 11 மணிக்கு சிவகாமி அம்மனுக்கும் நடராஜ பெருமானுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமியை வழிபட்டனர்.