பதிவு செய்த நாள்
07
அக்
2021
05:10
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
திண்டுக்கல் அபிராமி அம்மன், ரயிலடி சித்தி விநாயகர், ரவுண்ட் ரோடு கற்பக கணபதி, கூட்டுறவு நகர் செல்வ விநாயகர், நன்மை தரும் 108 விநாயகர், நேருஜி நகர் நவசக்தி விநாயகர், முத்தழகுபட்டி ஓத சுவாமி கோயில், சிறுமலை வெள்ளிமலை சிவன் கோயில், அகஸ்தியர்புரம் அகத்தியர் சிவசக்தி சித்தர் பீடத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நீர் நிலைகளில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.பழநி: பழநியில் நேற்று மஹாளய அமாவாசையை முன்னிட்டு சண்முகநதி ஆற்றங்கரை, நீர்நிலைகள், வீடுகளில் ஹிந்துக்கள், பிதுர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். மூதாதையர்களின் பெயர்களை வரிசையாக கூறி குழுவாகவும் தனித்தனியாகவும் தர்ப்பணம் செய்தனர். அகத்திக் கீரை வாங்கி பசுமாட்டுக்கு அளித்தனர். சிலர் அன்னதானம் வழங்கினர். இதனால் வாழ்வு செழிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. செம்பட்டி: மகாளய அமாவாசையை முன்னிட்டு அக்கரைப்பட்டி சடையாண்டி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மலை குகைக்கோயில், அடிவார கோயில்களில், மூலவருக்கு பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன், மகாதீபாராதனை நடந்தது. சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், தோணிமலை முருகன் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், அமாவாசை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.