வில்லியனுார்: உலக நன்மை வேண்டி சிவசுப்ரமணியர் கோவிலில் ஒரு கோடி ஷடாச்சர மந்திரம் பாராயணம் நேற்று துவங்கியது.வில்லியனுார் சுந்தரமூர்த்தி விநாயகபுரம் (மேற்கு) பகுதியில், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், உலக நன்மை கருதியும், கொரோனா நோய் தொற்றில் இருந்து விடுபட்டு மக்கள் சுபிட்சம் அடைய வேண்டியும், ஒரு கோடி ஷடாச்சர மந்திரம் பாராயணம் நேற்று மாலை 6:30 மணியளவில் துவங்கியது.துவக்க நிகழ்ச்சியில், கோவில் நிர்வாக தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். முருகேசன், கந்தசாமி பாராயணத்தை துவக்கி வைத்தார். தினமும் காலை 9:30 முதல் 10:30 மணி வரை, மாலை 6:30 முதல் இரவு 7:30 வரை பாராயணம் நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை கோவில் குருக்கள் பாலசுப்பரமணியன் தலைமையில் அறங்காவலர் குழுவினர் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.