மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கடைகள் அனைத்தும் நாளை(அக்.,8) அகற்றப்பட உள்ளன.
இக்கோயில் வீரவசந்தராய மண்டபத்தில் 2018 பிப்.,ல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மண்டபம், கடைகள் சேதமுற்றன. இதைதொடர்ந்து பாதுகாப்பு கருதியும், கலைநயமிக்க பகுதிகள் மறைக்காமல் இருக்கவும் அனைத்து கடைகளையும் அகற்ற கோயில் நிர்வாகம் உத்தரவிட்டது. கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடினர். அறநிலையத்துறை நீதிமன்றத்தில் கடந்த ஜூனில் கோயில் நிர்வாகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.கடைகளை காலி செய்ய உரிமையாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே கோயில் நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்த நிலையில், அம்மன் சன்னதி பகுதி, நாயக்கர் மண்டபம் பகுதி என கோயிலுக்குள் உள்ள 70 கடைகளும் நாளை அகற்றப்பட உள்ளன.