துாத்துக்குடி: குலசை., முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் 5 நாட்களுக்கு மட்டும் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர். 2வது நாள் தசரா திருவிழாவில் அன்னை முத்தாரம்மன், கற்பக விருட்சம் வாகனத்தில் விஸ்வகர்மேஸ்வரர் திருக்கோலத்தில் பவனி வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.