கமுதி: கமுதி அருகே நரசிங்கம்பட்டி கிராமத்தில் பாதாள காளியம்மன் கோயில் புரட்டாசி மாத பொங்கல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். பிள்ளையார் கோயிலில் இருந்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக பாதாள காளியம்மன் கோயிலுக்கு வந்தனர்.பின்பு அம்மனுக்கு பால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் அக்கினிசட்டி, மாவிலக்கு, பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர்.மாலையில் முளைப்பாரியை ஊர்வலமாக கொண்டு வந்து குண்டாறு கால்வாயில் கரைத்தனர்.