காரியாபட்டி: காரியாபட்டி செவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், நவராத்திரியை முன்னிட்டு, ஸ்ரீ சாமிநாத குருகுலம் சார்பில், உலக நன்மைக்காக வீணை இசை வழிபாடு நடந்தது. மாணவிகள் காயத்ரி, ஹிமஜா, தண்யா வீணை இசைத்தனர். ஒரு மணி நேரம் நடந்த இந்நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். ஏற்பாடுகளை வீணை ஆசிரியர் பாலகணேஷ் செய்திருந்தார்.