மைசூரு : தசரா ஜம்பு சவாரியில் அபிமன்யு யானையின் அக்கம் பக்கத்தில், இரண்டு பெண் யானைகள் பங்கேற்கும். ஒத்திகையை யானைகள் வெற்றிகரமாக முடித்துள்ளன, என வனத்துறை அதிகாரி கரிகாலன் தெரிவித்தார்.
மைசூரில் அவர் நேற்று கூறியதாவது:விக்ரம் யானைக்கு மதம் பிடித்துள்ளதால், இந்த யானையை தசரா நிகழ்ச்சிக்கு பயன்படுத்தவில்லை.இது போன்ற பிரச்னை ஏற்படும் என்பதால், கூடுதலாக மூன்று யானைகளை அழைத்து வந்தோம்.ஜம்பு சவாரிக்கு ஐந்து யானைகள் போதும். ஆனால் எட்டு யானைகளை அழைத்து வந்தோம். நகரின் சூழ்நிலைக்கு பொருந்தி கொள்வதில், இறுதி கட்டத்தில் பிரச்னை ஏற்படாமல் பார்த்து கொள்ளும் நோக்கில், நடவடிக்கை எடுக்கப்பட்டது. தசரா ஜம்பு சவாரியில், அபிமன்யு யானையின் அக்கம் பக்கத்தில், இரண்டு பெண் யானைகள் பங்கேற்கும். ஒத்திகையை யானைகள் வெற்றிகரமாக முடித்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.