பதிவு செய்த நாள்
11
அக்
2021
09:10
சூலூர்: புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி, மாதப்பூர் ஆஞ்சநேயர் கோவிலில் பஜனையுடன் பூஜைகள் நடந்தன.
புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமையை ஒட்டி, சூலூர் வட்டார பெருமாள் கோவில்கள், ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சூலூர் வேங்கட நாத பெருமாள் கோவில், வெங்கிட்டாபுரம் காரண பெருமாள் கோவில், கலங்கல், அப்பநாயக்கன்பட்டி, கள்ளப்பாளையம் பெருமாள் கோவில்களில் சிறப்பு திருமஞ்சனம், அலங்கார பூஜை நடந்தது. கரவளி மாதப்பூர் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. மாலை, அச்சம்பாளையம் சண்முகம் குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடந்தது. பக்தர்கள் பஜனை பாடல்களுக்கு ஏற்ப, நடனமாடினர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
நவராத்திரி கொலு பூஜை: காடாம்பாடி ராஜலிங்கம் நகர் சாந்த சிவ காளியம்மன் கோவிலில் நவராத்திரியை ஒட்டி கொலு பூஜை நடக்கிறது. அம்மனுக்கு தினமும் அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. கொலு பூஜையில், சிறுவர் சிறுமியர் ஏராளமானோர் பங்கேற்று பக்தி பாடல்களை பாடி வழிபட்டனர்.