பதிவு செய்த நாள்
11
அக்
2021
09:10
தொண்டாமுத்தூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவில் முன், கோவிலை திறக்க வலியுறுத்தி சிவபக்தர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட சிவனடியார்கள் சார்பில், அனைத்து நாட்களும் கோவிலை திறக்க வேண்டும் என வலியுறுத்தி, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் முன் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிவபக்தர்கள், தமிழகத்தில், டாஸ்மாக், பள்ளி, கல்லூரி, மால்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகள் வாரத்தின் அனைத்து நாட்களும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வாரத்தில் திங்கள் முதல் வியாழன் வரை உள்ள 4 நாட்கள் மட்டுமே, கோவில்கள் திறக்கப்படுகிறது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமை, கோவில்களில் பக்தர்களை அனுமதிப்பதில்லை. இந்துமத வழிபாட்டில், கூட்டு வழிபாடு கிடையாது. இதனால், நோய் தோற்று பரவவும் வாய்ப்பில்லை. மக்கள் தங்களின், மன கஷ்டங்களை தெய்வத்திடம் முறையிடுவதை தடுக்கக்கூடாது. வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோவில்கள் திறந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என, கோரிக்கையை வலியுறுத்தினார். இதில், 50க்கும் மேற்பட்ட சிவ பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.