பதிவு செய்த நாள்
11
அக்
2021
06:10
சித்ரதுர்கா: சித்ரதுர்கா ஹொசதுர்கா அருகே உள்ள பல்லாளா கிராமத்தை சேர்ந்த நடுகாடு சித்தர் சமுதாயத்தினர், சில ஆண்டுக்கு முன் கிறிஸ்துவ மதத்துக்கு மதம் மாறினர்.
இவர்கள் ஹொசதுர்கா பா.ஜ., - எம்.எல்.ஏ., கூலிஹட்டி சேகர் தலைமையில் மீண்டும் ஹிந்து மதத்துக்கு திரும்பும் நிகழ்ச்சி, கிராமத்தில் உள்ள ஹாலு ராமேஸ்வரா கோவிலில் நேற்று நடந்தது. ஏராளமானோர் சிலுவையை கழற்றி, கையில் கங்கனம் கட்டி தாய் மதத்துக்கு திரும்பினர்.இலவச போர்வைக்காக முண்டியடிப்புதுமகூரு: பா.ஜ., --- முன்னாள் எம்.எல்.ஏ., சுரேஷ் கவுடா நேற்று தன் பிறந்த நாளை முன்னிட்டு ஏழைகளுக்கு இலவச போர்வை வழங்கினார்.
இதை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பலத்த மழையிலும் முண்டியடித்து வாங்கினர். ஒரு சிலர் மூன்று, நான்கு போர்வைகளை கூட வாங்கி சென்றனர்.ஆற்றில் குதித்தவரை காப்பாற்றிய புற்கள்ஷிவமொகா: ஷிவமொகா துங்கா நகரை சேர்ந்தவர் தன்வீர், 27. இவர் நேற்று மதியம் துங்கா ஆற்று பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார். பொதுமக்கள் தடுத்தும் குதித்து விட்டார். ஆனால் ஆற்றின் புற்களில் சிக்கி கொண்டார். தீயணைப்பு படையினர், அவரை காப்பாற்றினர்.மாட்டு வண்டியில் செல்லும் முதல்வர்தாவணகரே: தாவணகரே ஹொன்னாலி அருகே உள்ள குந்துார் கிராமத்தில் வரும் 16ல் முதல்வர் பசவராஜ் பொம்மையின் கிராம தரிசனம் நடக்கிறது. விமானம் மூலமாக ஹொன்னாலி ஹெலிபேட் வரும் முதல்வர், காரில் குந்துார் செல்கிறார். கிராமத்தினர், முதல்வரை மாட்டு வண்டியில் அழைத்து செல்கின்றனர்.
வருவாய் துறை அமைச்சர் அசோக்கும் பங்கேற்க உள்ளார்.மகளுடன் பொழுது கழித்த தலைவர்பெங்களூரு: மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், அரசியல் பரபரப்புக்கு இடையில் மகளுடன் நேற்று பொழுதை கழித்தார்.பெங்களூரு ராஜாஜி நகரில் உள்ள லுா லுா மாலுக்கு சென்று, அங்குள்ள ராட்டினம் போன்றவற்றில் ஆடினார். இது குறித்து தன் டுவிட்டர் பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளார்.சாலையில் பூச்செடிகள்நெலமங்களா: பெங்களூரு ஊரகம் நெலமங்களா அருகே உள்ள தொரைபாளையா கிராமத்துக்கு சரியான சாலை வசதி கிடையாது. மழையால் மண் சாலைகள் சேறும் சகதியுமான மாறி விட்டன. இச்சாலையில் கிராமத்தினர் பூச்செடிகளை நட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது, உங்களை வணங்குகிறோம். எங்களுக்கு சாலை அமைத்து கொடுங்கள் என, வேண்டினர்.59 கேமராக்கள் ஆய்வுபெங்களூரு: பெங்களூரு கஸ்துாரி நகர் இரண்டாது மெயின் ரோட்டில் சில நாட்களுக்கு முன் கார் மோதியதில் நடந்து சென்றவர் உயிரிழந்தார். கே.ஆர்.புரம் போலீசார் 59 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். விபத்தை ஏற்படுத்திய எர்டிகா கார், ஜெராக்ஸ் கடைக்கு சென்றது தெரியவந்தது. ஜெராக்ஸ் ஆவணங்களை வைத்து கார் உரிமையாளர் யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டு, நோட்டீஸ் அனுப்பப்ட்டது. கார் உரிமையாளர் ஸ்ரீதர் என்பவர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமின் பெற்று போலீசில் சரணடைந்தார். கர்நாடகாவில் சில நாட்கள் மழைபெங்களூரு: அரபி கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் செப்டம்பர் 30 முதல் பெங்களூரு உட்பட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இம்மழை மேலும் சில நாட்களுக்கு தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.வெள்ளக்காடாக விஜயநகரா மாவட்டம்விஜயநகரா: விஜயநகராவில் மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ஹொஸ்பேட் அருகே உள்ள ராயர் ஏரி நிரம்பிதால் அக்கம் பக்கத்து வயல்களுக்குள் தண்ணீர் புகுந்தது. வாழை, கரும்பு, மக்காச்சோளம், வெங்காயம் போன்ற பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. ஏரி சீரமைக்கப்படாததால் தண்ணீர் வயல்களுக்குள் புகுந்ததாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.