விழுப்புரம் : முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி அருகே உள்ள வீரன் சுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், தனபூஜை, யாகசாலை பிரவேசம், முதல்கால பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு கோபூஜை, இரண்டாவது கால யாகபூஜை நடக்கிறது. 9.30 மணிக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் 20வது பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேகம் நடக்கிறது.