அரூர்: அரூர் அடுத்த தீர்த்தமலை அகஸ்தியர் ஆஸ்ரம மஹா கும்பாபிஷேக விழா, இன்று (ஜூன் 29) காலை 7 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி, நேற்று முன்தினம் கணபதி ஹோமம், அங்குரார்ப்பணம், கும்பாலங்காரம் முதல் கால யாக வேள்வி, தீபாராதனை ஆகியவை நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாக வேள்வியம், மஹாசுதர்சன ஹோமம், மூன்றாம் கால யாக பூஜை ஆகியவை நடந்தது. இன்று காலை நாடி சந்தானமும், நான்காம் கால யாக பூஜையும், காலை 7.30 மணி முதல் 9 மணி வரையில் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை வீரமணிதாசன், அறக்கட்டளை தலைவர் சத்தியநாராயணன், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.