பதிவு செய்த நாள்
12
அக்
2021
04:10
பெ.நா.பாளையம்: சின்னதடாகம் அருகே உச்சையனூரில் உள்ள அருள்மிகு மகாலட்சுமி அம்மன் திருக்கோயிலில், ஆறாம் ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி, கொலு பூஜை நடந்து வருகிறது.
சின்னதடாகம் அருகே தடாகம் புதூர், ஆர்.ஆர்.நகர், உச்சையனூரில் அருள்மிகு மகாலட்சுமி அம்மன் திருக்கோயில் உள்ளது. இங்கு நவராத்திரி விழாவையொட்டி கடந்த, 7ம் தேதி முதல், வரும், 15 ம் தேதி வரை, 9 நாட்களுக்கு நவராத்திரி பூஜை தினசரி மாலை, 7:00 மணிக்கு நாம சங்கீர்த்தன நிகழ்ச்சியுடன் கொலு வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. விழாவையொட்டி, ஒன்பது நாட்களும், அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, நாம சங்கீர்த்தனம், மகா தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை உச்சையனூர் மற்றும் தடாகம்புதூர் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.