பதிவு செய்த நாள்
12
அக்
2021
04:10
உடுமலை: எலையமுத்துார் மாரியம்மன் கோவிலில், மகா சண்டி ேஹாமப் நடந்தது.உடுமலை அருகே எலையமுத்துார், மாரியம்மன் கோவிலில், மகா சண்டி ேஹாமப் பெருவிழா நேற்றுமுன்தினம் துவங்கியது. விழாவுக்காக, கிராம மக்கள் சார்பில், அமராவதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.பெருவிழாவின், முதல் நாளில், கோ பூஜை, மகா கணபதி பூஜை, மகா கணபதி ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று, காலை, 6:00 மணி முதல் சிறப்பு வழிபாடுகள் துவங்கியது.சண்டி நவா வரண பூஜை, நவாஷ்ரி ேஹாமம், முதற்கால சவுபாக்கிய, 108 திரவ்யாஹதி உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. மாலை, 4:30 மணிக்கு மேல், இரண்டாம் கால யாக பூஜைகள் நடந்தது.இன்று, கோவிலில், காலை 6:30 மணிக்கு மேல், சகஸ்ரநாம பாராயணம், சண்டி ேஹாமம், மூன்றாம் கால, 108 திரவியாஹதி, மகா தீபாராதனை நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு மேல், கலச பூஜை, நவாரண பூஜை, மகா பூர்ணாஹதி, தீபாராதனை நடக்கிறது.இரவு 7:30 மணிக்கு மேல், கடங்கள் புறப்பாடு, அம்பாளுக்கு யாக பல சமர்ப்பணம், கும்ப தீர்த்தாபிேஷகம், மகா தீபாராதனை நடக்கிறது. விழாவையொட்டி, இன்று கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.