பதிவு செய்த நாள்
12
அக்
2021
04:10
நவராத்திரி விழாவை முன்னிட்டு, பொள்ளாச்சி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த, 7ம் தேதி சக்தி கலசத்துடன் திருமஞ்சனம் கொண்டு, கொலு வைத்து விழா துவங்கப்பட்டது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடக்கிறது. நேற்று, அம்மனுக்கு பூக்களை கொண்டு, புஷ்பாஞ்சலி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று, அகிலாண்டேஸ்வரி அலங்காரம், இன்று, கமலாத்மிகா அலங்காரம் நடக்கிறது. 16ம் தேதி மகா அபிேஷகத்துடன் விழா நிறைவடைகிறது.உடுமலைஉடுமலை மாரியம்மன் கோவிலில், நவராத்திரி பூஜை விழா, கடந்த 7ம் தேதி துவங்கியது. நாள்தோறும், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். நேற்று, அம்மன், சவுபாக்கியலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.முத்தையா பிள்ளை லே - அவுட் சக்தி விநாயகர் கோவிலில், அகிலாண்டேஸ்வரி அம்மன் வராகி அம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். பத்ரகாளியம்மன் கோவிலில், நடந்த சிறப்பு பூஜையில், அம்மன் கஜலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.இன்று, மாலை 6:30 மணிக்கு, மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு, மகாலட்சுமி அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், அம்மனுக்கு, கவுரி அலங்காரத்துடன், சிறப்பு பூஜை நடக்கிறது - நிருபர் குழு -