பதிவு செய்த நாள்
12
அக்
2021
04:10
ஹாசன் : ஆண்டுக்கு ஒரு முறை தரிசனம் கொடுக்கும், வரலாற்று பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா தரிசனத்துக்கு பக்தர்களுக்கு தடை விதித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஹாசன் ஹாசனாம்பிகா கோவில், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும். ஹாசனாம்பிகாவுக்கு கர்நாடகாவில் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலும், பெருமளவில் பக்தர்கள் உள்ளனர்.முந்தைய ஆண்டுகளில், லட்சக்கணக்கான பக்தர்கள் ஹாசனாம்பிகாவை தரிசித்தனர்.கொரோனாவால், பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. வி.ஐ.பி.,க்களுக்கு மட்டும், அனுமதியளிக்கப்பட்டது.இம்முறை கொரோனா குறைந்துள்ளதால், ஹாசனாம்பிகாவை தரிசிக்கலாம் என பக்தர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
ஆனால் மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு தடை விதித்துள்ளது.கோவிலில் நடக்கும் பூஜைகள், நிகழ்ச்சிகளை ஆன்லைனில் பார்க்க வாய்ப்பளித்துள்ளது. இது பக்தர்களுக்கு அதிருப்தியளித்துள்ளது.வி.ஐ.பி.,க்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்காமல் திருப்பதி போன்று, கொரோனா விதிமுறைகளை பின்பற்றி ஹாசனாம்பிகையை தரிசிக்க வாய்ப்பளிக்கும்படி, பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.