Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
படிப்பில் சிறக்க மஞ்சள் பூசுங்க! கட்டிக் காப்பார் கால பைரவர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கல்விக்கோயில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2021
07:10


குழந்தைகள் பள்ளிக்குச் சென்றால் மட்டும் போதுமா...அக்கறையுடன் படிக்க வேண்டமா...அதற்கு பெற்றோர் தரிசிக்க வேண்டிய தலம் தஞ்சாவூர் மாவட்டம் இன்னம்பூர். கல்விக்கோயிலான இங்கு எழுத்தறிநாதர் என்னும் பெயரில் சிவன் இருக்கிறார். இவரை வழிபட்டால் கல்வி வளர்ச்சி உண்டாகும்.  
அரண்மனை கணக்கராக இருந்த சுதன்மன் எழுதிய கணக்கில் சோழ மன்னருக்கு சந்தேகம் எழுந்தது. கணக்கை சரியாக காண்பித்தும் மன்னர் ஏற்கவில்லை. கவலைப்பட்ட சுதன்மன் கணக்கு ஏடுகளை வைத்து சிவபெருமானிடம் முறையிட்டார். அவர் மீது இரக்கம் கொண்ட சிவனும் அந்த கணக்கரின் வடிவிலேயே அரண்மனைக்கு சென்றார். மன்னரின் சந்தேகத்தை தெளிவுபடுத்தி விட்டு மறைந்தார். இதை அறியாத சுதன்மன் மன்னரைக் காண வந்தார். மீண்டும் கணக்கர் ஏடுகளுடன் வருவதையறிந்து, ‘‘ சுதன்மரே! கணக்கு தான் சரியாகி விட்டதே, மீண்டும் ஏன் வந்தீர்கள்?’’ என மன்னர் கேட்ட பிறகே உண்மை புரிந்தது. கணக்கர் வடிவில் சிவன் வந்து சந்தேகம் தீர்த்ததை எண்ணி மன்னர் நெகிழ்ந்தார். சுதன்மனிடம் மன்னிப்பு கேட்டார். இதன் பின்னணியில், சிவனுக்கு கோயில் எழுப்பப்பட்டு, ‘எழுத்தறிநாதர், அட்சரபுரீஸ்வரர்’ என திருநாமம் சூட்டப்பட்டது. ‘அட்சரம்’ என்றால் ‘எழுத்து’. சுவாமிக்கு ‘தான்தோன்றீயீசர்’ என்றும் பெயருண்டு. அகத்திய முனிவருக்கு சிவன் இலக்கணம் உபதேசித்த தலம் இது. சுகந்த குந்தலாம்பாள், நித்திய கல்யாணி என்னும் அம்மன் சன்னதிகள் இங்குள்ளன. சூரியன் இங்கு வழிபட்டு வானில் பேரொளி வீசுபவராக விளங்குகிறார். சூரியனுக்கு ‘இனன்’ என்று பெயருண்டு. அவர் சிவனை நம்பி வழிபட்டதால் இத்தலம் ‘இனன் நம்பு ஊர்’ எனப்பட்டு ‘இன்னம்பூர்’ என்றானது.

குழந்தைகளுடன் பெற்றோர் வழிபாடு செய்தால் கல்வி வளர்ச்சி உண்டாகும். ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நெல்லில் எழுதும் சடங்கான ‘அட்சர அப்யாசம்’ நடத்தப்படுகிறது. பேச்சுத்திறமை, படிப்பறிவு இல்லாதவர்களுக்கு நெல்லால் நாக்கில் எழுத அறிவுக்கூர்மை உண்டாகும். குழந்தை பாக்கியம் பெற இங்கு அர்த்தநாரீஸ்வரருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்கின்றனர்.
சிவனை வழிபடும் விதத்தில் ஆண்டுக்கு இருமுறை மார்ச் 26,27,28, செப்.16,17,18 ஆகிய நாட்களில் சூரியக்கதிர்கள் மூலவர் மீது விழுகின்றன. கருவறை மீது யானை படுத்திருப்பது போல விமானம் உள்ளது. இதற்கு ‘கஜப்பிருஷ்ட விமானம்’ என்று பெயர்.  சிவன் நிகழ்த்தும் ஐந்து தொழில்களை குறிக்கும் விதத்தில் ஐந்து கலசங்கள் கருவறை மீது உள்ளன. அவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் அருளல் என்பதாகும்.
எப்படி செல்வது:
கும்பகோணம் –  திருப்புறம்புயம் செல்லும் சாலையில் 8 கி.மீ.,யில் இன்னம்பூர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar