Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கல்விக்கோயில் துணுக்கு தோரணங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கட்டிக் காப்பார் கால பைரவர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2021
07:10


 காவல் தெய்வமான காலபைரவருக்கு மத்தியபிரதேசம் உஜ்ஜைனி நகரில் கோயில் உள்ளது. ஷிப்ரா நதிக்கரையில் அமைந்த இக்கோயிலில் சுவாமியின் தலை மட்டும் பெரியளவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.   
அந்தகன் என்னும் அசுரன் அக்னியின் நடுவே நின்று தவம் செய்து சிவனிடம் வரங்கள் பல பெற்றான். அதனால் ஆவணம் கொண்ட அசுரன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தொல்லை கொடுக்க ஆரம்பித்தான். கைலாயம் சென்ற தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். தான் கொடுத்த வரத்தை தீமைக்கு பயன்படுத்திய அசுரனை அழிக்க அவர் முடிவெடுத்தார். தன் அம்சமாக காலபைரவரை உருவாக்கி அசுரனுடன் போர் புரிய அனுப்பினார். பைரவரும் அவனைக் கொன்று வெற்றி வாகை சூடினார். மகிழ்ச்சியடைந்த தேவர்கள் கால பைரவருக்கு நன்றி தெரிவித்தனர். இதன் அடிப்படையில் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னரான பத்ராசென் என்பவர் காலபைரவர் கோயிலை கட்டினார்.
  மால்வா கட்டிடக்கலை பாணியில் கோட்டை அமைப்பில் கோயில் உள்ளது. கருவறையில் சுவாமியின் உருண்டை வடிவத் தலையில் கண்கள், மூக்கு, வாய் மட்டுமே இடம் பெற்றுள்ளன. காபாலிகா, அகோரி வழிபாட்டு முறைப்படி தாந்திரீக பூஜை நடக்கிறது. பூஜை பொருட்களில் பூமாலை, கருப்புக்கயிறு, ஊதுபத்தி, சூடத்துடன் மதுபானமும் இடம் பெறுகிறது. கோயில் சுவரில் விநாயகர், விஷ்ணு, தேவியின் புடைப்புச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. பைரவர் சன்னதியின் அருகிலுள்ள ஆலமரத்தடியில் சிவலிங்கமும், எதிரில் நந்தியும் உள்ளன. கருவறைக்கு வலது புறத்தில் பாதாள பைரவி சன்னதி உள்ளது. தரை மட்டத்திற்குக் கீழே இரண்டடி சதுர வடிவ நுழைவு வாயிலில் குனிந்து தவழ்ந்து சென்றே அம்மனை தரிசிக்க வேண்டும். கருவறையின் எதிரில் கூம்பு வடிவத்தில் பெரிய தீபஸ்தம்பம் உள்ளது. நீண்ட ஜடாமுடியுடன் உடல் முழுவதும் திருநீறு பூசிய சாதுக்கள் கோயிலைச் சுற்றி தங்கியுள்ளனர். தலவிருட்சமாக ஆலமரம் உள்ளது.
தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட்டால் எதிரி தொல்லை மறையும். நீண்ட கால நோய் கூட விலகும்.  இழந்த பணம், பொருட்கள் மீண்டும் கிடைக்கும். இரவில் நீண்ட துாரம் வாகனத்தில் செல்பவர்கள் பயணம் சுகமாக அமைய முந்திரி மாலை அணிவித்து தீபம் ஏற்றுகின்றனர். காலபைரவரின் வாகனமான நாயின் சிலை வாசலில் உள்ளது. விருப்பம் நிறைவேற சனிக்கிழமைகளில் இங்கு திரியும் நாய்களுக்கு பக்தர்கள் ரொட்டிகளை அளிக்கின்றனர். ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியன்று இங்கு காலபைரவர் அவதார தினம் கொண்டாடப்படுகிறது.  
செல்வது எப்படி: மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜைனி பேருந்து நிலையத்திலிருந்து 4 கி.மீ.,
விசேஷ நாட்கள்: கால பைரவர் அவதார தினம், மகாசிவராத்திரி

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar