ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் விஜயதசமி நாளன்று ஏடு துவங்கும் நிகழ்ச்சியான வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. திரளாக குழந்தைகள் பெற்றோருடன் பங்கேற்று கல்வி பயிலும் நிகழ்ச்சியை துவங்கினர்.
ராஜபாளையம் சொக்கர் கோயிலில் காலை 7:00 மணி முதல் கல்விக் கடவுளான சரஸ்வதி தேவி முன் பெற்றோருடன் அணிவகுத்து தங்கள் கல்வியை தொடங்கினர். இதேபோல் கோதண்ட ராமசுவாமி கோயிலில் நூற்றுக்கணக்கான பெற்றோர் தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்று கோயில் தலைமை அர்ச்சகர் மூலம் கல்வியை தொடங்கினர். சத்திரப்பட்டி சேவாபாரதி சார்பில் வேதாந்த மடாலயத்தில் குழந்தைகள் நாவில் தேன் தடவி தட்டில் பரப்பி வைத்திருந்த அரிசியில் குழந்தைகள் விரல் பிடித்து ஓம் மற்றும் என்று எழுதி ஏடு துவங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.