பதிவு செய்த நாள்
15
அக்
2021
04:10
குன்னூர்: குன்னூரில், ஓட்டுப்பட்டறையில் மத நல்லிணக்கத்துடன் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
குன்னூர் பகுதிகளில், கோவில்கள், வீடுகளில் கடந்த, 9 நாட்களாக நவராத்திரி கொலு வைக்கப்பட்டது. நிறைவு நாளான நேற்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
குன்னூர் ஓட்டுப்பட்டறை விநாயகர் கோவில், வெலிங்டன் வழிபாட்டு மன்றத்தில் நவராத்திரி கொலு வைத்து பூஜைகள் நடத்தப்பட்டன. ஒட்டுப்பட்டறையில், மகாலட்சுமி என்பவரின் வீட்டில், 11 படிக்கெட்டுகளில், தசாவதாரம், அஷ்டலட்சுமி, மாரி, சரஸ்வதி, மகாலட்சுமி, கிருஷ்ணர் உட்பட சிலைகள் என 200க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில், அரிசி, உப்பு, கோதுமை, நவதானியங்கள், வீணை வைத்து, பூஜைகள் நடத்தப்பட்டது. அருகில் உள்ள மக்கள், மத நல்லிணக்கத்துடன் பங்கேற்றனர். பிரசாத விநியோகம் நடந்தது.