பாளை: பாளை அருகேயுள்ள தருவை செல்வ பால பாக்ய ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபாவின் 103வது மகா சமாதி சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடந்தது. ஷீரடி சாய்நாதருக்கு சிறப்பு மலர் அலங்காரத்தில் வழிபாடு நடந்தது. மதியம் அன்னதானம் நடந்தது. வழிபாட்டில் பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை செல்வ பாலபாக்ய ஷீரடி சாய்பாபா அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.