பதிவு செய்த நாள்
18
அக்
2021
12:10
சூலூர்: புரட்டாசி கடைசி சனிக்கிழமையை ஒட்டி, பெருமாள் கோவில்களில் நடந்த பூஜையில், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.
புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை கோவில்களை திறக்கக் கூடாது, என, உத்தரவிடப் பட்டிருந்தது. அதனால், சூலூர் வட்டாரத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், வழக்கமான பூஜைகள் மட்டுமே நடந்தன. பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கடந்த, 14 ம்தேதி கோவில்களை திறக்க அரசு அனுமதி யளித்தது. இதையடுத்து, சூலூர் சுற்றுவட்டார கோவில்களில், விஜய தசமி பூஜை, புரட்டாசி கடைசி சனிக்கிழமை பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பூஜைகளில் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.