அமரம்பேடு, : அமரம்பேடு கிராமத்தில் உள்ள அமரேஸ்வரர் கோவில் உழவார பணிகள் நேற்று நடந்தன.குன்றத்துார் தாலுகா, அமரம்பேடு கிராமத்தில் உள்ளது. அமரேஸ்வரர் கோவில். இங்கு லிங்க ரூபம் எட்டு பட்டையாக காட்சிஅளிக்கிறார். இந்த கோவிலின் நந்தவனம் மற்றும் தீர்த்தகுளம் ஆகியவை பராமரிப்பு இன்றி புதர் மண்டி இருந்தது.இந்நிலையில், திருமுல்லைவாயல் பகுதியில் இயங்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் உழவார பணி அமைப்பை சேர்ந்தவர்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று, அமரேஸ்வரர் கோவில் பூஜை பொருட்களை சுத்தம் செய்து கொடுத்தனர்.மேலும், கோவிலின் குளம், நந்தவனத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்தனர்.