Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமி ... திருப்பதியில் ஒரே நாளில் ரூ.3 கோடி உண்டியல் வசூல் திருப்பதியில் ஒரே நாளில் ரூ.3 கோடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேளச்சேரி வாசுதேவ பெருமாள் கோவில் ஆக்கிரமிப்பு
எழுத்தின் அளவு:
வேளச்சேரி வாசுதேவ பெருமாள் கோவில் ஆக்கிரமிப்பு

பதிவு செய்த நாள்

19 அக்
2021
11:10

வேளச்சேரி: ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள வேளச்சேரி வாசுதேவ பெருமாள் கோவில் இடத்தை, ஹிந்து சமய அறநிலையத்துறை மீட்டெடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அடையாறு மண்டலம், 178வது வார்டு வேளச்சேரியில் வாசுதேவ பெருமாள் கோவில் உள்ளது. தொல்லியல் துறை ஆராய்ச்சியில், 16ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் என தெரிய வந்துள்ளது. முன்பு, 10 ஆயிரம் சதுர அடி பரப்புக்கு மேல் இருந்துள்ளது; தற்போது 2,000 சதுர அடி பரப்பில் உள்ளது. இதில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் உள்ளது.அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர், 20 ஆண்டுகளுக்கு முன்னர் மரத்தை முறித்து, சிலையை வெளியே வீசி, கட்டடத்தை இடித்து ஆக்கிரமிக்க முயன்றபோது, அங்குள்ள பெருமாள் பக்தர்கள் எதிர்த்தனர். இதை தொடர்ந்து, அவர்கள் ஒன்று சேர்ந்து, வாசுதேவ பெருமாள் என்ற அறக்கட்டளையை துவக்கி, கோவிலை ஆக்கிரமிக்காத வகையில் பாதுகாத்து வருகின்றனர். கோவிலில் உள்ள பெருமாள் சிலைக்கு பூஜை நடத்துகின்றனர். இந்த கோவிலை, ஹிந்து சமய அறநிலையத்துறை வசம் ஒப்படைக்க முயன்றபோது, அரசியல் கட்சிகள் சேர்ந்து தடுத்துள்ளன.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் அமைச்சர்சேகர்பாபு, இடத்தை நேரில் ஆய்வு செய்தார். அப்போது சுற்றி புதராகக் கிடந்தது. அதை மாநகராட்சி சுத்தம் செய்தது. இடத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார். இந்நிலையில், கோவில் பின்பகுதியில் கூடாரம் அமைத்து, வயதான நபரை தங்க வைத்துள்ளனர். பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருப்பதாகக் கூறி, கோவில் இடத்தை ஆக்கிரமிக்க மீண்டும் முயற்சி நடக்கிறது. அமைச்சர் தலையிட்டு, இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து வாசுதேவ பெருமாள் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் கூறியதாவது: அமைச்சர் ஆய்வு செய்து, ஹிந்து சமய அறநிலையத்துறை வசம் சேர்க்கப்படும் என கூறினார். அதன் பின், இடத்தை ஆக்கிரமிக்க கட்சியினர் தீவிரமாக இறங்கினர். ஆக்கிரமிப்பு தொடர்பாக அமைச்சர், அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றோம்; நடவடிக்கை தான் இல்லை. கோவிலை மீட்டு, ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள தண்டீஸ்வரம் கோவில் வசம் ஒப்படைக்க, அமைச்சர்நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று காலை ... மேலும்
 
temple news
வடபழனி, ஆண்டவர் கோவிலை சுற்றியுள்ள மாடவீதிகளில், புற்றீசலாக முளைத்து வரும் பல வகையான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சிறப்புலி நாயனார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் அளிக்கும் போது இறைவன் ஆயிரத்தில் ஒருவராக ... மேலும்
 
temple news
கோவை; அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடைபெற்று வரும் கார்த்திகை பிரம்மோற்சவத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar