உடுமலை: உடுமலை சின்னபொம்மன்சாளையில், மாரியம்மன் கோவில் ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு அலங்காரத்தில், அம்மன் அருள்பாலித்தார்.உடுமலை அருகே சின்னபொம்மன்சாளையில் மாரியம்மன் கோவில் ஆண்டு விழா நேற்று முன்தினம் துவங்கியது.நேற்று காலை முதல் அம்மனுக்கு தீர்த்தம் செலுத்துதல், சிறப்பு அபிேஷக பூஜைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை கிராம மக்கள் தரிசனம் செய்தனர். பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.