பதிவு செய்த நாள்
20
அக்
2021
01:10
பொள்ளாச்சி:பொள்ளாச்சி பள்ளிவாசல்களில், மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு தொழுகை, மற்றும் அன்னதானம் நடந்தது.இஸ்லாமிய மதத்தின் இறுதி இறை துாதராக கருதப்படும், நபிகள் நாயகத்தின் பிறந்த நாள், இஸ்லாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான, ரபி- அல்- அவ்வலில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. மிலாடி நபியான நேற்று, நபிகளின் அறிவுரைகள், பொன்மொழிகளை நினைவு கூர்ந்தும், சிறப்பு தொழுகை நடத்தியும், பள்ளிவாசல்களில் கொண்டாடப்பட்டது.
காலையில், மவுலித் ஷரிப் எனப்படும் சிறப்பு ஓதலை தொடர்ந்து, மதியம் அனைவருக்கும் அன்னதானம் அளிக்கப்பட்டது.வால்பாறைவால்பாறை புதுமார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள, பள்ளிவாசலில் மிலாடிநபி விழா நடந்தது. நேற்று காலை, 5:30 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது. விழாவில், மூத்தவல்லி கமாலுதீன், தலைவர் அப்துல்காதர், செயலாளர் பசீர்அகமது ஆகியோர் அன்னதானத்தை துவக்கி வைத்தனர். பள்ளிவாசல் இமாம், உஸ்தாதுக்கள், இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.இதே போல், சோலையாறு, உருளிக்கல், சின்கோனா, அட்கட்டி, வாட்டர்பால்ஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில், மிலாடிநபி விழா சிறப்பு தொழுகை நடந்தது.