அரியலூர்: உலகப் பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரத்தில் அன்னகாப்பு விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உலக பிரசித்தி பெற்ற மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு அன்னக்காப்பு விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கி, கணக்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது.அதனை தொடர்ந்து பிரகதீஸ்வரர் சுவாமிக்கு 9 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெற்று, மாலை 6 மணியளவில் அன்னக்காப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்படுகிறது.