பதிவு செய்த நாள்
21
அக்
2021
03:10
புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, அன்னாபிஷேகம் நடந்தது.கருவடிக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற குரு சித்தானந்த சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று காலை மூலவருக்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள், இளநீர், தேன் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.மாலை 6:00 மணிக்கு, 50 கிலோ அரிசியில் சாதம் சமைத்து மூலவருக்கு சாற்றி, 150 கிலோ காய்கறிகளால் அலங்கரித்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 8:00 மணிக்கு, மூலவருக்கு சாத்தப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.தொடர்ந்து, மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.வெகு விமர்சையாக நடைபெற்ற அன்னாபிஷேகத்தை பக்தர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்தனர்.அன்னாபிஷேக வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை கோவிலின் சிறப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மணிகண்டன், தேவசேனாதிபதி குருக்கள், சேது குருக்கள், சீனு குருக்கள் ஆகியோர் செய்தனர்.