பதிவு செய்த நாள்
21
அக்
2021
03:10
மேட்டுப்பாளையம்: ஐப்பசி மாதம் பவுர்ணமியை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் வெள்ளியங்கிரி ஆண்டவர் சுவாமிக்கு, அன்னபிஷேகம் செய்யப்பட்டது.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சக்தி விநாயகர் கோவிலில், வெள்ளியங்கிரி ஆண்டவர் சன்னதி உள்ளது. இங்கு ஐப்பசி மாதம் பவுர்ணமியை முன்னிட்டு, வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு அன்னபிஷேகம் செய்யப்பட்டது. முன்னதாக இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன், எலுமிச்சை சாறு, சந்தனம், குங்குமம், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பிறகு வெள்ளியங்கிரி ஆண்டவர், அன்னாபிஷேக அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தலைமைப் பூசாரி துரைசாமி, உதவி பூசாரிகள் ரஞ்சித்குமார், மனோஜ் குமார் ஆகியோர் பூஜைகளை செய்தனர். ஏராளமான பக்தர்கள் பூஜையில் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.