கீழக்கரை: கீழக்கரையில் உள்ள உக்கிர வீரமாகாளியம்மன் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள் பொடி உள்ளிட்ட 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பெண்கள் நெய்விளக்கேற்றி, பொங்கலிட்டனர். சக்தி ஸ்தோத்திரம், பஜனை பாடல்கள் உள்ளிட்டவைகள் பாடப்பட்டது. ஏற்பாடுகளை விஸ்வக்கிய தங்கம், வெள்ளி தொழிலாளர் சங்கம், கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.