பதிவு செய்த நாள்
23
அக்
2021
09:10
உடுமலை பழனியாண்டவர் நகர் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், கும்பாபிஷேகத்தையொட்டி, யாக சாலை பூஜைகள் நேற்று துவங்கியது. இக் கோவில் கும்பாபிஷேகம் வரும், 24ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, நேற்று காலை, 9:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து, நவக்கிரக ஹோமம், காப்பு கட்டுதல், லட்சுமி பூஜை , பூர்ணாகுதி, மகா தீபாராதனை , எந்திர பிரதிஷ்டை சாமி மருந்து சாத்துதல் உட்பட நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று, (23ம் தேதி), மாலை, 6:00 மணி முதல், விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, மிருசங்கரனம் மண் எடுத்தல், காப்புக்கட்டுதல், கும்ப அலங்காரம், முதற்கால யாக பூஜை நடக்கிறது. நாளை , (24ம் தேதி) காலை 7:00 மணி முதல் இரண்டாம் கால யாக பூஜை , மூலமந்திரம் ேஹாமம் உட்பட பூஜைகள் நடக்கிறது. காலை 8:15 மணிக்கு, மகாகும்பாபிஷேகம் நடக்க உள்ளது.