பதிவு செய்த நாள்
27
அக்
2021
01:10
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரத்தில் பச்சையம்மன் கோவில் கும்பாபி ?ஷக விழா நடந்தது. ராசிபுரம் அருகே, சிங்களாந்தபுரம் பச்சையம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை கணபதி பூஜையுடன் யாகவேள்வி தொடங்கியது. நேற்று அதிகாலை, வேத மந்திரங்கள் முழங்க புனிதநீர் கொண்டுவரப்பட்டு பச்சையம்மன், பெரியசாமி, மதுரை வீரன், காத்தவராய சுவாமி, புடவைக்காரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தெளிக்கப்பட்டது. தொடர்ந்து கும்பாபி ?ஷகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
* குமாரபாளையம் கோட்டைமேடு சாந்தபுரி நகர் கற்பக விநாயகர்; குமாரபாளையம் அபெக்ஸ் காலனி நாக சுந்தரகணபதி, நாகேஸ்வரி அம்மன்; குமாரபாளையம் சேலம் சாலை மஹா கணபதி, முனியப்ப சுவாமி, கருப்பண்ண சுவாமி, கன்னிமார் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.