புதுச்சேரி: பிள்ளைச்சாவடி சீரடி சாயிபாபா கோவில் குரு பூர்ணிமா விழா வரும் 3ம் தேதி நடக்கிறது.பிள்ளைச்சாவடி புதுச்சேரி பொறியியல் கல்லூரி எதிரே உள்ள சீரடி சாயிபாபா கோவிலில் குரு பூர்ணிமா விழா வரும் 3ம் தேதி காலை 6 மணிக்கு துவங்குகிறது. 6.30 மணிக்கு சத்ய நாராயண பக்ஷ பூஜை, 7.45 மணிக்கு சாயிபாபா பல்லக்கு உற்சவம், 8 மணிக்கு சுவாமிகளுக்கு ஆரத்தி நடக்கிறது. இத்தகவலை சீரடி சாய் சேவா சமீதி மக்கள் தொடர்பு அதிகாரி சாயிராம் தெரிவித்துள்ளார்.