சிவசடையப்பர் கோவிலில் 13ம் ஆண்டு சம்வத்சராபிஷேக விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூன் 2012 10:06
புதுச்சேரி: புதுச்சேரி பேட்டையான் சத்திரம் திரிபுரசுந்தரி உடனுறை சிவசடையப்பர் சுவாமி கோவிலில் 13ம் ஆண்டு சம்வத்சராபிஷேக விழா நடந்தது.விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, முதல் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், முக்கிய நிகழ்வான கலசாபிஷேகம் நடந்தது. இரவு கூட்டேரிப்பட்டு ஆடல் அரசரின் சிவகான பேரிகை முழக்கத்துடன், திரிபுரசுந்தரி சிவசடையப்பர் சுவாமிகள் வீதியுலா நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக்குழுவினர் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.