வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேதுநாராயணப்பெருமாள் கோயில் விழா நாளை துவங்குவதை யொட்டி, நேற்று கொடிமரத்தில் கருடக்கொடி ஏற்றப்பட்டது. வத்திராயிருப்பு துநாராயணப்பெருமாள் கோயில் விழா நாளை (ஜூலை 1 ) துவங்குகிறது. இதற்கான கொடியேற்றம் நேற்று விமரிசையாக நடந்தது. அதிகாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடந்தன. பக்தர்கள் புடைசூழ கோயில் கொடி மரத்தில் கருடக்கொடி ஏற்ற சிறப்பு பூஜைகளும் நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏழு 7 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் சுவாமி பல்வேறு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் சேவா சமிதி டிரஸ்ட் தலைவர் ராஜகோபாலன், செயலாளர் நாராயணன், பொருளாளர் அழகர் உட்பட நிர்வாகிகள் செய்துள்ளனர்.