பதிவு செய்த நாள்
30
ஜூன்
2012
10:06
பண்ணைக்காடு: பண்ணைக்காடு மும்முடி ராஜகுலத்திற்கு பாத்தியப்பட்ட வெங்கடேசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் பொன்விழா நடந்தது. மூன்று நாள் யாகசாலை பூஜையுடன் துவங்கிய விழாவில் புண்யாக வாசனம், ப்ரதான ஹோமம், கும்பபிரதசகினம் ஹோமங்கள் நடந்தன. நேற்று காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை சிம்ம லக்கனத்தில் வெங்கடேசப்பெருமாள், பத்மாவதி தாயார், லட்சுமி, நூதன சக்கரதாழ்வார், யோக நரசிம்மர், கருடாழ்வார், ஆஞ்சநேயர், வீரம்மாள், காமாட்சியம்மன், லாட சன்னாசி, நாகம்மாள், விநாயகர், முருகன், நவக்கிரகங்களுக்கு சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ரவி பட்டாட்சியர் தலைமை வகித்தார். திருக்கல்யாணம், வாண வேடிக்கை, தங்கரத மின் விளக்கு அலங்காரத்தில் சுவாமி நகர்வலம் வந்தார். அன்னதானமும், கலை நிகழ்ச்சி, ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்று கிராம பகுதியினர் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர். பண்ணைக்காடு மும்முடி ராஜகுல நிர்வாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.