ஏழு பேர் சிரஞ்சீவிகளாய் (நிலையானவர்கள்) வாழ தகுதி பெற்றவர்கள். சுயநலமற்ற சேவை செய்த அனுமன், அண்ணன் என்றும் பாராமல் நியாத்தின் பக்கம் நின்ற விபீஷணன், மகாவிஷ்ணுவுக்கு தானம் அளித்த மகாபலி, சிவபக்தியால் எமனையே வென்ற மார்க்கண்டேயர், மகாபாரதம் எழுதிய வியாசரும், தந்தை சொல்லுக்காக தாயையே கொன்ற பரசுராமர், கடைசி வரை கட்சி மாறாமல் கவுரவர்களுக்காக போர் புரிந்த துரோணரின் மகன் அஸ்வத்தாமன் ஆகியோர் சிரஞ்சீவி என்னும் நிலை பெற்று இன்றும் வாழ்வதாக புராணங்கள் சொல்கின்றன.