மதினா நகரில் நாயகம் சென்று கொண்டிந்தபோது, முனங்கும் சப்தம் கேட்டது. சாகும் நிலையில் ஒட்டகம் ஒன்று இருந்ததை பார்த்தார். அதை தடவிக் கொடுத்த அவர், ஒட்டகத்தின் உரிமையாளரை அழைத்து, ‘இளமை காலத்தில் உழைத்த, இதை புறக்கணிக்கலாமா’ எனக்கேட்டார். உரிமையாளர் தலைகுனிந்தார். ‘பயன் கருதி பிறருக்கு உதவுவது கீழான குணம்’ என்றார். ‘என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்’ என்றார் உரிமையாளர். ‘உங்களிடம் மன்னிப்பை எதிர்பார்க்கவில்லை. வாழ்விற்கு ஆதாரமான அன்பை மட்டும் எதிர்பார்க்கிறேன். அன்பு மட்டுமே இன்பமானது’ என சொன்னார்.