பதிவு செய்த நாள்
02
நவ
2021
09:11
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில், ஆறு மாதங்களுக்கு பின் புனித நீராடிய பக்தர்கள், மனநிறைவுடன் சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், கொரோனா இரண்டாவது அலை ஊரடங்கால் ஏப்., 22ல் மூடப்பட்டது. ஊரடங்கு தளர்வு அறிவித்து, ஆக., 4ல் கோவில் திறக்கப்பட்டாலும், கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராட தமிழக அரசு அனுமதிக்காததால், பக்தர்கள் வேதனை அடைந்தனர்.
இந்நிலையில், அரசு உத்தரவுப்படி நேற்று அதிகாலை 5:30 மணிக்கு தீர்த்தங்கள் திறக்கப்பட்டன. பக்தர்கள் தலா 25 ரூபாய் கட்டணம் செலுத்தி, 22 தீர்த்தங்களிலும் புனித நீராடினர். ஆறு மாதங்களுக்கு பின் நீராடிய பக்தர்கள், மனநிறைவு, மகிழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
* செல்வி, 48, கிருஷ்ணகிரி.கொரோனா இரண்டாவது அலையில், இருதடவை இக்கோவிலுக்கு குடும்பத்துடன் வந்தபோது, புனித நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றேன். மூன்றாவது தடவை தரிசிக்க வந்த எனக்கு, புனித நீராடட அனுமதி அளித்தது, பெரும் புண்ணியம் கிடைத்ததாக நம்புகிறேன்.இனிவரும் காலத்தில் கொரோனா இல்லாத நம் நாடு உருவாகி, மக்கள் ஆரோக்கியத்துடன் கஷ்டமின்றி வாழ கடவுள் அருள்புரிவார்.
* ரவிக்குமார், 42; சென்னை.ராமேஸ்வரம் கோவில் என்றாலே, புனித நீராடி தரிசிப்பது தான் ஞாபகம் வரும். 22 தீர்த்தங்களிலும் நீராடி, பெரும் பாக்கியம் பெற்றேன். இந்நாளில் கடவுளின் அருளாசியுடன் தரிசித்தது மனதிற்கு ஆறுதலாகவும், சந்தோஷமாகவும் இருந்தது.
* பாஸ்கரன், 56; தலைவர், யாத்திரை பணியாளர் சங்கம்கடந்த ஆறு மாதங்களாக, தீர்த்தம் இறைத்து ஊற்றும் பணியாளர்கள், பலதரப்பு சிறு வியாபாரிகளும் வருவாய் இன்றி பாதித்தனர். பக்தர்கள் வலியுறுத்தியதால் நேற்று திடீரென தீர்த்தங்களை திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதும், பக்தர்கள் மகிழ்ச்சியுடன் நீராடி சென்றனர். பக்தர்களுக்கு தீர்த்தம் இறைத்து ஊற்றுவதை, கடவுள் அளித்த சேவையாக கருதுகிறோம்.
கொரோனா இரண்டாவது அலையில், இருதடவை இக்கோவிலுக்கு குடும்பத்துடன் வந்தபோது, புனித நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றேன். மூன்றாவது தடவை தரிசிக்க வந்த எனக்கு, புனித நீராட அனுமதி அளித்தது, பெரும் புண்ணியம் கிடைத்ததாக நம்புகிறேன்.இனிவரும் காலத்தில் கொரோனா இல்லாத நம் நாடு உருவாகி, மக்கள் ஆரோக்கியத்துடன் கஷ்டமின்றி வாழ கடவுள் அருள்புரிவார்.
செல்வி, 48, கிருஷ்ணகிரி: ராமேஸ்வரம் கோவில் என்றாலே, புனித நீராடி தரிசிப்பது தான் ஞாபகம் வரும். 22 தீர்த்தங்களிலும் நீராடி, பெரும் பாக்கியம் பெற்றேன். இந்நாளில் கடவுளின் அருளாசியுடன் தரிசித்தது மனதிற்கு ஆறுதலாகவும், சந்தோஷமாகவும் இருந்தது.
ரவிகுமார், 42, சென்னைகடந்த ஆறு மாதங்களாக, தீர்த்தம் இறைத்து ஊற்றும் பணியாளர்கள், பலதரப்பு சிறு வியாபாரிகளும் வருவாய் இன்றி பாதித்தனர். பக்தர்கள் வலியுறுத்தியதால் நேற்று திடீரென தீர்த்தங்களை திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதும், பக்தர்கள் மகிழ்ச்சியுடன் நீராடி சென்றனர். பக்தர்களுக்கு தீர்த்தம் இறைத்து ஊற்றுவதை, கடவுள் அளித்த சேவையாக கருதுகிறோம்.பாஸ்கரன், 56, தலைவர், யாத்திரை பணியாளர் சங்கம்