பதிவு செய்த நாள்
02
நவ
2021
02:11
சென்னை :கடவுளுக்கும், பக்தர்களுக்கும் இடையில், இடைத்தரகர்களுக்கு இடமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருச்சி,
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் இரண்டாம் பிரகாரத்தில், பக்தர்கள் சுற்றி வர
அனுமதிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு
தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு
அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவிலுக்கு வரும்
பக்தர்களை, பஸ் நிலையத்தில் இடைத்தரகர்கள் சந்தித்து, தரிசனத்துக்கு
ஏற்பாடு செய்வதாக 500 ரூபாய் வரை வசூலிக்கின்றனர் என்று மனுதாரர் தரப்பில்
தெரிவிக்கப்பட்டது.உடனே நீதிபதிகள், கடவுளுக்கும், பக்தர்களுக்கும்
இடையில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை. ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்றனர்.
இந்த பிரச்னை தொடர்பாக மனுவாக தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தி, விசாரணையை
இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர். அரசு தரப்பிலும் அறிக்கை தாக்கல்
செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். தணிக்கை குழுகோவில்களின் கணக்குகளை மத்திய
தணிக்கை குழு வாயிலாக தணிக்கை செய்யக் கோரிய வழக்கும், நீதிபதிகள் முன்
விசாரணைக்கு வந்தது. இதுகுறித்தும் அறிக்கை அளிக்க, அறநிலையத்துறைக்கு
நீதிபதிகள் உத்தரவிட்டனர்.