Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம் : பருவத்தே பயிர் செய் தனுசு: மன உறுதி கூடும் தனுசு: மன உறுதி கூடும்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருச்சிகம் : சுகமான சூழல் உருவாகும்
எழுத்தின் அளவு:
விருச்சிகம் : சுகமான சூழல் உருவாகும்

பதிவு செய்த நாள்

05 நவ
2021
04:11


விசாகம் 4ம் பாதம் : “வீரியம் பெருக்கு”
 கடந்த ஒரு வருட காலமாக இருந்து வந்த மூன்றாம் இடத்துச் சஞ்சாரம் முடிவிற்கு வந்து நான்காம் இடமாகிய சுகஸ்தானத்தில் குருவின் அமர்வைப் பெற உள்ளீர்கள். இதனால் வாழ்வியல் நிலையில் நிம்மதியான சுகத்தினை உணர்வீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் நன்கு ஆலோசித்து செயல்படும் திறன் ஓங்கும். அதுவும் 2, 5க்கு அதிபதியாகிய குரு சுக ஸ்தானத்தில் சென்று அமர்வது விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிறந்த யோகமாக இருக்கும். ஆன்மிகப் பிரயாணம் செல்ல கால நேரம் கூடி வரும். செவ்வாயை ராசி அதிபதி ஆகவும் குருவினை நட்சத்திர அதிபதி ஆகவும் கொண்டிருக்கும் நீங்கள் இந்த நேரத்தில் உறவுகளின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வீர்கள். அடுத்து வரும் ஐந்துமாதங்களும் உங்கள் வாழ்வினை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும்.
நிதி : உங்கள் ராசிக்கு 2, 5க்குரிய குரு நான்காம் இடத்தில் அமர்வதால் சுப நிகழ்ச்சிகள், ஆன்மிகப் பணிகள் ஆகியவற்றிற்காக அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். ஆயினும் ஏதேனும் ஒரு வழியில் பொருள் வரவு தடையில்லாமல் வந்து கொண்டிருக்கும். மொத்தத்தில் செலவினங்களுக்குத் தகுந்தாற்போல் வரவு நிலையும் அதிகரிப்பதால் இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலனைத் தருகின்ற வகையிலேயே அமைந்துள்ளது. புதிதாக வீடு கட்ட நினைப்போருக்கு வங்கி சார்ந்த கடனுதவி தடையில்லாமல் வந்து சேரும்.

குடும்பம் : பெற்றோர், குடும்பப் பெரியோரின் ஆதரவு இருந்து வரும். பல வருடங்களாக விட்டுப்போயிருந்த தகப்பனார் வழி உறவு ஒன்று உங்களைத் தேடி வரும் வாய்ப்புள்ளது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டு அவர்களோடு இணைவீர்கள். பிள்ளைகளின் வாழ்வியல் நிலை ஸ்திரத்தன்மை அடையும். குடும்பத்தில் ஒற்றுமை உணர்வு அதிகரிக்கும். குடும்பத்தினர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்படுவதால் மகிழ்ச்சி கூடும்.

கல்வி : வித்யா ஸ்தானத்தில் குரு அமர்வதால் மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக அமையும். வினாவிற்கேற்ற விடையினை சரியான புள்ளிவிபரத்துடன் வெளிப்படுத்தி மிகுதியான மதிப்பெண்களைப் பெறுவார்கள். பள்ளியில் நடைபெறும் உடல் ரீதியான விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பிடிப்பார்கள். சட்டம், மருத்துவம், அறிவியல்துறை மாணவர்கள் சிறப்பான நற்பலன்கள் காண்பார்கள்.

பெண்கள் : குடும்பத்தின் மகிழ்ச்சியைத் தக்கவைப்பதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். விரும்பிய பொருட்களை உடனுக்குடன் வாங்கி விடுவீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சியில் சிறப்பு கவனம் கொள்ள வேண்டியது அவசியம். கணவரின் பணிகளுக்கு உங்களது ஆலோசனைகள் அவ்வப்போது தேவைப்படும். குழப்பம் தரும் விவகாரங்களில் முக்கியமான முடிவுகளை வியாழக்கிழமையில் எடுப்பது நல்லது. ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். தான, தர்மம் என்ற பெயரால் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புண்டு. கவனமாக இருக்கவும்.

உடல்நிலை: நீண்டநாள் தொந்தரவுகள் முடிவிற்கு வரும். எண்ணெய்யினால் ஆன தின்பண்டங்களைத் தவிர்ப்பது நல்லது. அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப்படுவதால் உடல்நிலை பாதிக்கப்படலாம். செரிமானக் கோளாறுகள் பிரதான இடத்தினைப் பிடிக்கும். முடிந்த வரை ஓட்டல் சாப்பாட்டினைத் தவிர்ப்பது நல்லது. ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய் உள்ளவர்கள் அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

தொழில் : 10ம் இடமாகிய ஜீவன ஸ்தானத்தின் மீது விழும் குருவின் நேரடிப் பார்வை உங்கள் வாழ்வியல் தரத்தை உயர்த்தும். வேலைரீதியாக சிறப்பான நிலையைக் காண்பீர்கள். நேர்மையும், நாணயமும் அலுவலகத்தில் உங்களுக்கு நற்பெயரைப் பெற்றுத் தரும். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெற்று பதவி உயர்வைக் காண்பீர்கள். உயர்பதவியில் உள்ளோர் தொழிலாளிகள் சார்ந்த பிரச்னைகளை மிகுந்த லாவகத்தோடு கையாண்டு நற்பெயர் காண்பார்கள். ராணுவத்தினர், காவல் துறையினர், தொழிற்சாலை பணியாளர்கள், முட நீக்கு இயல் மருத்துவர்கள், அணு விஞ்ஞானிகள், நுண்ணுயிரி ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் வெகு சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
பரிகாரம் :  திங்கட்கிழமை தோறும் சோமாஸ்கந்தரை வழிபட்டு வாருங்கள்.
பின்பற்ற வேண்டிய திருக்குறள் :
    அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
     என்பும் உரியர் பிறர்க்கு.

அனுஷம் :   “வருவதை மகிழ்ந்து உண்”
 குருவின் நான்காம் இடத்து அமர்வு தனிப்பட்ட முறையில் உங்கள் திறமையை வளர்க்கிறது. செவ்வாயை ராசி அதிபதி ஆகவும் சனியை நட்சத்திரநாதன் ஆகவும் கொண்டிருக்கும் நீங்கள் இதுநாள் வரை அறியாமல் செய்து வந்த தவறினை திருத்திக் கொள்வீர்கள். உங்கள் மனம் புரியாமல் துாற்றியவர்கள் தற்போது உண்மை உணர்ந்து பாராட்டுவார்கள். எந்த ஒரு விஷயத்திலும் நன்கு ஆலோசித்து செயல்படும் திறன் ஓங்கும். அதே நேரத்தில் அடிக்கடி பிரயாணம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள். சுபகாரியங்களை நடத்துவதில் அதிக அலைச்சலை சந்திப்பீர்கள். தீர்த்தயாத்திரை செல்ல நினைப்போருக்கு சாதகமான நேரம் இது. சதா உங்களைச் சுற்றி மனிதர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். நீங்கள் இட்ட பணியைத் தட்டாமல் செய்யும் வகையில் பணியாளர்கள் அமைவார்கள். தனிப்பட்ட முறையில் உங்கள் அந்தஸ்து உயர்வதோடு அதிகாரமும் செல்லுபடியாகும்.

நிதி : குடும்பத்தின் பொருளாதார நிலை உயர்வடையத் துவங்கும். பொருள் சேமிப்பில் ஈடுபடுவதற்கு ஏற்ற காலமாக இருக்கும். வீடு, மனை, நிலம் போன்ற அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்து வைப்பது நல்லது. ஜனன ஜாதகத்தில் குரு, சுக்ரன், சூரியன் வலுவாக இருக்கப் பிறந்தவர்கள் தங்கம், வெள்ளி, வைரம் போன்றவற்றில் முதலீடு செய்ய இயலும். விரய ஸ்தானம் ஆகிய எட்டாம் இடத்தின் மீது விழும் குரு பகவானின் பார்வை சுபசெலவுகளை உண்டாக்கும். தாயார் வழி சொத்துக்கள் வந்து சேரும் நேரம் இது.

குடும்பம் : விலகிச் சென்ற உறவு ஒன்று உதவி நாடி வரும். தாயார் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப ஸ்தான அதிபதி குரு நான்கில் அமர்வதால் உறவினர்கள் வழியில் நன்மை நடக்கக் காண்பீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் வார்த்தைக்கு மிகுந்த மதிப்பளித்து நடப்பார்கள். பிள்ளைகளின் வாழ்வில் சுபநிகழ்வுகள் குறித்த ஏற்பாட்டினைச் செய்வீர்கள். தாயாரின் உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை.

கல்வி : குருவின் சாதகமான நிலையால் மாணவர்களின் கல்வித்தரம் உயரும். கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில் இன்ஜினியரிங், இயற்பியல், உடற்கல்வி, பிஸியோதெரபி, பயோ டெக்னாலஜி ஆகிய துறைகளைச் சார்ந்த மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள். ஆன்லைன் வகுப்புகளில் சிரமம் கண்டு வந்தவர்கள் நேரடி வகுப்புகளில் சுகம் காண்பார்கள். பாடங்களைப் புரிந்து படிக்கும் தன்மை கூடும். ஆசிரியர்களின் உதவியால் வெற்றி காண்பீர்கள்.

பெண்கள் : அவ்வப்போது மனதினில் குழப்பங்களும், வீணான கற்பனைகளால் தேவையற்ற பயமும் இருந்து வரும். குடும்பத்தில் நீங்கள் பிரச்னைகளாகக் கருதும் விஷயங்களை பெரியவர்களிடம் கேட்டு தெளிவு பெற வேண்டியது அவசியம் ஆகிறது. உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் முக்கியப் பங்காற்றுவீர்கள். பிறந்த வீட்டிலிருந்து ஆடை, ஆபரணங்கள் வந்து சேரும் வாய்ப்பு உண்டு.

உடல்நிலை : உணவுப் பழக்கத்தில் நிலவும் கட்டுப்பாடின்மையால் அவ்வப்போது உடல்நிலையில் அசதி தோன்றும். நரம்புத் தளர்ச்சி, கைகால் வலி, மூட்டு வலி, தசைப்பிடிப்பு போன்றவற்றால் அதிகம் அவதிப்பட நேரிடும். கீரை வகைகளையும். புரோட்டீன் சத்து மிக்க பருப்பு வகைகளையும் ஆகாரத்தில் சேர்த்துக் கொள்வது நல்லது. காலை நேர நடைப்பயிற்சி, சூரிய நமஸ்காரம் போன்றவை உங்கள் ஆரோக்யத்தைக் கட்டிக் காக்கும்.

தொழில் : அரசுப்பணிக்காக காத்திருப்போருக்கு சாதகமான நிலை உருவாகும். பணியில் ஸ்திரமில்லாமல் இங்குமங்கும் அலைச்சலை சந்தித்தவர்கள்  ஓரிடத்தில் பணிநிரந்தரம் பெறுவார்கள். சுயதொழில் செய்வோர் சீரான லாபத்தினை அடைந்து வருவார்கள். அதே நேரத்தில் கூட்டுத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மிகுந்த கவனத்தோடு கணக்கு வழக்குகளை கையாள வேண்டியது அவசியம். எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், ஹார்டுவேர். மெக்கானிகல் தொழிற்சாலை சார்ந்த பணியாளார்கள் சிறப்பாக செயல்பட்டு பணிரீதியான முன்னேற்றத்தை அடைவார்கள். மருத்துவம், கெமிக்கல்ஸ், திரவப்பொருட்கள், கலைத்துறையைச் சார்ந்தவர்கள் அதிக எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.
பரிகாரம் : சனிக்கிழமைகளில் அனுமனை வழிபட்டு வாருங்கள்.
பின்பற்ற வேண்டிய திருக்குறள் :
    ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
     கோடியும் அல்ல பல.

கேட்டை : “ரூபம் செம்மை செய்”

குருவின் நான்காம் இடத்து அமர்வு மனதில் ஸ்திரத்தன்மையைத் தோற்றுவிக்கும். புத்திகாரகன் புதனை நட்சத்திரநாதனாகவும் வீரத்தைத் தரும் செவ்வாயை ராசிநாதன் ஆகவும் கொண்டிருக்கும் நீங்கள் தற்போது மனதில் நிலவி வந்த மந்தத்தன்மை விலகி மனமகிழ்ச்சியோடு பணியாற்றி வருவீர்கள். நீங்கள் செய்ய நினைக்கும் விஷயங்களை நண்பர்கள், உறவினர்களின் உதவியுடன் சாதித்துக் கொள்வீர்கள். அதே நேரத்தில் திடீர் நண்பர்களை நம்பி பெரிய விஷயங்கள் எதிலும் இறங்குவது நல்லது அல்ல. அறிமுகம் இல்லாதவர்களால் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளதால் பிரயாணத்தின் போது மிகுந்த கவனத்துடன் இருக்கவும்.

நிதி : பொருளாதார நிலைமை மிக நன்றாக இருந்து வரும். நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு குறுகிய கால சேமிப்பில் ஈடுபடுவீர்கள். டிசம்பர் மாத பிற்பாதியில் உங்களது பட்ஜெட்டையும் மீறி சற்று அதிகமாக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். அந்த செலவுகள் கூட குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காக இருக்குமே அன்றி அநாவசிய செலவுகள் என்பது இல்லை. குடும்பத்தினருடன் இன்பச் சுற்றுலா செல்லும் வாய்ப்புண்டு.

குடும்பம் : பிள்ளைகளின் வழியில் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும். அவர்களது பெயரில் சேமிப்பில் ஈடுபட வாய்ப்பு உருவாகும். குடும்பத்தினரோடு பொழுதினைக் கழிப்பதில் அளவற்ற மகிழ்ச்சி அடைவீர்கள். பெற்றோர் நலனில் அக்கறை கொள்ளுதல் அவசியம். நெடுநாளைய குடும்ப நண்பர் ஒருவரின் மூலம் உங்கள் குடும்பத்தின் பாரம்பரியத்தையும், அருமை பெருமைகளையும் தெரிந்து கொள்வீர்கள். உடன்பிறந்தோரால் குறிப்பிடத்தகுந்த ஆதாயத்தினைக் காண்பீர்கள். தம்பதியருக்குள் அவ்வப்போது வீண் கருத்துவேறுபாடு தோன்றி மறையும்.

கல்வி : மாணவர்கள் பயமின்றி தேர்வுகளை எழுதி முடிக்க கூடுதல் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. ஆன்லைன் வகுப்புகளால் அவதிப்படுபவர்கள் சக மாணவர்களின் துணையுடன் பாடங்களைப் புரிந்துகொள்வீர்கள். பொறியியல்துறை, ஆசிரியர் பயிற்சி, கணிப்பொறி அறிவியல் போன்ற துறையில் படித்து வரும் மாணவர்கள் ஏற்றம் காண்பர்கள். ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் அவ்வப்போது ஒரு சில தடைகளை சந்தித்து வந்தாலும் மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் தடைகள் நீங்கப் பெற்று வெற்றி காண்பார்கள்.

பெண்கள் : அவ்வப்போது மனதினில் குழப்பங்களும், வீணான கற்பனைகளால் தேவையற்ற பயமும் இருந்து வரும். மனதில் இருந்து வரும் பயத்தினை முகத்தினில் காட்டாமல் திறமையான பேச்சின் மூலம் வெற்றி கண்டு வருவீர்கள். கணவரோடு இணைந்து செய்யும் பணிகள் சிறப்பான வெற்றியைத் தரும். குடும்பப் பெரியவர்களின் உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை. பிறந்த வீட்டாருக்கு உதவி செய்ய வேண்டிய சூழல் உருவாகலாம்.

உடல்நலம் : உடல்நிலையை விட மனநிலையில் கூடுதல் கவனம் தேவை. உடல்நிலை குறித்து மனதில் தோன்றும் சந்தேகங்களை உடனுக்குடன் மருத்துவரின் ஆலோசனை பெற்று தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது.  முக்கியமான நேரத்தில் சுய வைத்தியம் பலன் தராது என்பதை நினைவில் கொள்ளவும். எலும்புத் தேய்மானம், மூட்டு வலி, அஜீரணம், பித்தம் ஆகியவற்றால் அவதிப்படும் வாய்ப்புண்டு.

தொழில் : பணியாளர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு உதவியாளர்களின் உதவியோடு அலுவல் பணியினை செய்து முடிப்பார்கள். வெளிநாட்டு பணிக்காக காத்திருப்பவர்களுக்கு மார்ச் மாதத்திற்குள் சாதகமான தகவல்கள் வந்து சேரும். ஆடிட்டிங், வங்கி, இன்ஷ்யூரன்ஸ் போன்ற துறைகளில் பணிபுரிபவர்கள் நல்ல நிலையினை அடைவார்கள். வியாபாரிகளின் தொழில் நிலை சிறக்கும். நவீன வியாபார உத்திகள் தொழில் முறையில் நல்ல வளர்ச்சியை உண்டாக்கும். விளம்பரங்கள் பெரிதும் துணைபுரியும். சுயதொழில் செய்வோரில் எலக்டிரிகல்ஸ், கேபிள், பிளம்பிங், கட்டிடக் கலை, தச்சுப்பணி, அச்சுக்கலை, தையல், திரைப்படத்துறையில் ஒளிப்பதிவு துறைகளைச் சார்ந்தவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். அதே போன்று செல்போன், சிம்கார்டு, ஐபாட், கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை, ஜெராக்ஸ், போட்டோ ஸ்டுடியோ, வீடியோ கேம்ஸ், இண்டர்நெட் சென்டர் தொழில்கள் சூடு பிடிக்கும்.
பரிகாரம் : புதன்தோறும் சண்டிகேஸ்வரர் சன்னதியில் விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள்.
பின்பற்ற வேண்டிய திருக்குறள் :
     மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
     எல்லாப் புகழும் தரும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
போத்தனூர்: மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. தைப்பூசம் துவக்கம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் தை மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பழநி ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar