திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோயிலில் வரும் 10ல், தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 18ம் தேதி பவுர்ணமி; 19ல் மஹா தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி 17ம் தேதி மதியம், 1:00 மணி முதல், 20ம் தேதி வரை நான்கு நாட்கள் கிரிவலம் செல்ல தடை விதித்து, கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.