ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாளமாமுனிகள் சன்னதியில் ஐப்பசி மூல அவதார நட்சத்திர உற்ஸவம் நடந்தது.
இதனை முன்னிட்டு நேற்று காலை 10 மணிக்கு சன்னதியில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அழகிய மணவாள மாமுனிக்கு, சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் ஆண்டாள் சன்னதியில் எழுந்தருளிய மணவாளமாமுனிகள் சிறப்பு பூஜைகள் நடந்தது. மாட வீதிகள் சுற்றி வந்து பெரியபெருமாள் மற்றும் பெரியாழ்வார் சன்னதியில் மங்களாசாசனம் மரியாதை நடந்தது. பின்னர் மணவாள மாமுனிகள் சன்னதியில் சேவா காலம், சாற்றுமுறை நடந்தது. ஏற்பாடுகளை சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் செய்திருந்தார். ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் இளங்கோவன், விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில துறவியர் பேரவை அமைப்பாளர் சரவண கார்த்திக் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.