எழுமலை: எழுமலை மாதாந்திர சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெற்றது. சுப்பிரமணியர் மயில் வாகனத்தில் புறப்பட்டு மாலை 4.15 மணியளவில் எழுமலை முத்தாலம்மன்,ராஜகணபதி கோயில் அருகில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் சூரபத்மனை வதம் செய்தார். தொடர்ந்து சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தேனி வேதபுரி சமாநந்தசரஸ்வதி, சிவாந்தசரஸ்வதி சுவாமிகள் அருளாசி வழங்கினர்.