பழநியில் திருக்கல்யாண உற்ஸவத்துடன் கந்தசஷ்டி விழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2021 11:11
பழநி: பழநியில் திருக்கல்யாண உற்ஸவத்துடன் கந்தசஷ்டி விழா நிறைவடைந்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயிலில் நவ.4 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கி நவ.,10 வரை கந்த சஷ்டி விழா நடந்தது. கோயில் யானை கஸ்தூரி மலைக்கோயிலில் 6 நாட்கள் தங்கியிருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கியது. நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு மேல் நான்கு மலைக்கோயில் கிரிவீதிகளில் சூரசம்ஹார நிகழ்வு நடந்தது. திருக்கல்யாணம் உற்ஸவம் மலைக்கோயிலில் வள்ளி, தேவசேனா சமேத சண்முகர் திருக்கல்யாண உற்ஸவம் வேத மந்திரங்கள் ஓத உட்பிரகாரத்தில் நடைபெற்றது. காலை 11:00 மணிக்கு பின் வழக்கம்போல் மலைக் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பெரியநாயகியம்மன் கோயிலில் வள்ளி, தேவசேனா முத்துக்குமாரசாமி திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது. போலீஸ் டி.ஐ.ஜி., விஜயகுமாரி, கோயில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.சூரசம்ஹாரம், திருக்கல்யாண நிகழ்வும் வலைத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளால் சென்ற ஆண்டைப் போலவே, இந்தாண்டும் பக்தர்கள் அனுமதிக்கப் படாமல் கந்தசஷ்டித் திருவிழா நிறைவு பெற்றது.