வீரசின்னம்பட்டி வழிவிடு முருகன் கோவில் மகாகும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2021 02:11
சாணார்பட்டி : வீரசின்னம்பட்டி வழிவிடு முருகன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
சாணார்பட்டி யூனியன் வீரசின்னம்பட்டியில் உள்ள வழிவிடு முருகன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் 15 நாட்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். தொடர்ந்து ராமேஸ்வரம், கொடுமுடி மற்றும் திருமலைக்கேணியில் என திருத்தலங்களில் இருந்து தீர்த்தங்கள் கொண்டுவரப்பட்டன. மேலும் விடிய விடிய யாகங்கள் வளர்க்கப்பட்டன. பாலவிநாயகர், வழிவிடு முருகன், தொட்டிச்சி அம்மன், மாட்டுக்கார கருப்பண்ணசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு திருத்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.